மாவட்ட செய்திகள்

பண்ணவாடிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கபுதிய சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு + "||" + Set up new checkpoint and monitor

பண்ணவாடிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கபுதிய சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

பண்ணவாடிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கபுதிய சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு
புதிய சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு
கொளத்தூர்:
கொளத்தூரை அடுத்த மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் இங்கு வந்து நீர்நிலையின் அழகை ரசிப்பதுடன், நீர்த்தேக்க பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை, சமைத்து சுவைப்பது வழக்கம்.இந்த நிலையில் கொேரானா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சுற்றுலாத்தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பண்ணவாடி பரிசல் துறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் விதமாக கொளத்தூர் போலீசார் நேற்று பண்ணவாடி பரிசல் துறையில் புதிதாக சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனைச்சாவடி மூலம் போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை திரும்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பண்ணவாடி பரிசல்துறைக்கு மீன்களை சுவைக்க மதுபிரியர்கள் வருவதாகவும் தெரிகிறது. அவர்களையும் போலீசார் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.