மாவட்ட செய்திகள்

கொண்டலாம்பட்டி அருகேவாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது + "||" + 2 arrested for cutting wallpaper with scythe

கொண்டலாம்பட்டி அருகேவாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

கொண்டலாம்பட்டி அருகேவாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சீரங்கம்மாள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீசிற்கும், சீரங்கம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சீரங்கம்மாள் மகன் விஜயன் (21) மற்றும் இவரது உறவினர் அருள்முருகன் (27) ஆகியோர் சேர்ந்து சதீசை தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயன், அரிவாளால் சதீசை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயன், அருள்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.