மாவட்ட செய்திகள்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது + "||" + Arrested

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
மானாமதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை,

மானாமதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தொடர் வழிப்பறி

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், மொபட்டில் செல்லும் பெண்களிடம் இருந்து மர்ம ஆசாமிகள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். தாயமங்கலம் சாலை, வேதியரேந்தால் சாலையிலும் இந்த வழிப்பறி சம்பவம் நடந்தது.

இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் தாரிக், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பக்ருதீன் மற்றும் போலீசார் கொன்னக்குளம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

2 பேர் கைது

இந்த நிலையில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். பின்னர் தீவிரமாக விசாரித்த போது 2 பேரும் வழிப்பறி கொள்ளையர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது 33), மாடசாமி(36) ஆவார்கள்.
இவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். வழிப்பறி கொள்ளை கும்பலை பிடித்த போலீசாரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
சோழவந்தானில் மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
2. பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது
தாயில்பட்டி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
3. பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது
மதுரை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது
மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை கடத்தியவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, 60 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
5. பெண்ணை தாக்கியவர் கைது
பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.