மாவட்ட செய்திகள்

நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் கைது- 35 லிட்டர் ஊறல் பறிமுதல் + "||" + arrest

நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் கைது- 35 லிட்டர் ஊறல் பறிமுதல்

நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் கைது- 35 லிட்டர் ஊறல் பறிமுதல்
நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 35 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.
நம்பியூர்
நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 35 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.
சாராயம்
நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் போலீசாருடன் ராயர்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார்சைக்கிளில் கேன்களுடன் வந்தார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஒவ்வொரு கேனிலும் தலா 3 லிட்டர் என மொத்தம் 9 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது. 
3 பேர் கைது
உடனே போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேலன் (வயது 35), சதீஷ்குமார் (31), பிரபு (38) ஆகியோர் என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 9 லிட்டர் சாராயம், காய்ச்சுவதற்காக வைத்திருந்த 35 லிட்டர் ஊறல், மூலப்பொருட்கள், மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தார்கள். 
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோபி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
சோழவந்தானில் மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
2. பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது
தாயில்பட்டி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
3. பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது
மதுரை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது
மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை கடத்தியவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, 60 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
5. பெண்ணை தாக்கியவர் கைது
பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.