பெங்களூருவில் மருத்துவ படுக்கை ஒதுக்கீட்டு முறைகேட்டில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்


பெங்களூருவில் மருத்துவ படுக்கை ஒதுக்கீட்டு முறைகேட்டில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 May 2021 11:45 AM GMT (Updated: 2021-05-07T17:15:07+05:30)

பெங்களூருவில் படுக்கை ஒதுக்கீட்டு முறைகேட்டில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தினார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஒதுக்கீட்டின் படுக்கைகளை ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி. பகிரங்கப்படுத்தினார். நல்ல பணியை அவர் செய்துள்ளார் என்று நான் கருதினேன்.

ஆனால் அதில் மதத்தை கலந்து இருப்பது தான் தெரியவந்துள்ளது. படுக்கை ஒதுக்கீட்டு முறைகேட்டில் மதத்தை கலந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி.யை கைது செய்ய வேண்டும். இந்த படுக்கை ஒதுக்கீட்டில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் தொடர்பு உள்ளதாக புகார் வந்துள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த முறைகேட்டில் தேஜஸ்வி சூர்யா, முஸ்லிம் ஊழியர்களின் பெயர்களை மட்டும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்கள். அவர்களுடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். முஸ்லிம்கள் இறைச்சி வெட்டி விற்காவிட்டால் நாம் இறைச்சியை உண்ண முடியாது.

அவர்கள் பஞ்சர் போடாவிட்டால் நாம் வண்டியை ஓட்ட முடியாது. தேஜஸ்வி சூர்யா குடும்பத்தினர் வண்டியை பழுது பார்ப்பது இல்லையா?. இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. ரமேஷ் ஜார்கிகோளி மீதான ஆபாச புகார் வழக்கு விசாரணை என்ன ஆனது?. மருத்துவ படுக்கை ஒதுக்கீட்டு முறைகேட்டில் தொடர்பு உடையவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

இந்த முறைகேட்டில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே ஈடுபட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் குணமாகி வருகிறார்கள். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் அதிகளவில் இறக்கிறார்கள். சாம்ராஜ்நகர் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நீதித்துறை மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story