மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’; ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை + "||" + ‘Seal’ for shops that do not follow curfew rules Warning at the consultation meeting

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’; ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’; ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை
ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை வணிகர்கள் பின்பற்றுவது குறித்து குன்னம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் தலைமை தாங்கி பேசுகையில், குன்னம், வேப்பூர், புதுவேட்டக்குடி, மருதையான்கோவில் ஆகிய ஊர்களில் உள்ள பால், மருந்து கடைகள் திறக்க எவ்வித தடையும் கிடையாது. ஆனால் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றியே வியாபாரம் செய்ய வேண்டும். மளிகை கடை, காய்கறி கடை, டீக்கடை ஆகியவற்றை வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே திறந்து வியாபாரம் செய்ய வேண்டும். 12 மணிக்கு பின்னர் கடையை தவறாமல் மூட வேண்டும். ஓட்டல்களை காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறந்து பார்சல் வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களை உட்கார வைத்து உணவு வழங்கக்கூடாது. மீறி அவ்வாறு வழங்கப்பட்டால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். இறைச்சிக்கடைகளை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே திறந்து வியாபாரம் செய்ய வேண்டும். மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு திறக்கப்படும் கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள், கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். முககவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது. மேலும் பணியாளர்களும் முககவசம் அணியவில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்றார். கூட்டத்திற்கு குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ராம்குமார் முன்னிலை வகித்தனர். குன்னம், மேலமாத்தூர், மருதையன் கோவில், புதுவேட்டக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜெயங்கொண்டத்தில் கொரோனா பரவும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 3-வது அலை மோசமாக இருக்கும்- நிபுணர்கள் எச்சரிக்கை
டெல்லியில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 2-வது அலையை விட மோசமான நிலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3. முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்
அரியலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ரூ.3½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
4. மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முற்றிலும் புறக்கணிப்பு
முழு ஊரடங்கு இன்று தொடங்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்புவிதிமுறைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலை இருந்தது.