இருமார்க்கமாக இயங்கும் பெங்களூரு கன்டோன்மண்ட்-அகர்தலா வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு


இருமார்க்கமாக இயங்கும் பெங்களூரு கன்டோன்மண்ட்-அகர்தலா வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு
x
தினத்தந்தி 8 May 2021 5:23 PM GMT (Updated: 8 May 2021 5:23 PM GMT)

இருமார்க்கமாக இயங்கும் பெங்களூரு கன்டோன்மண்ட்-அகர்தலா வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

பெங்களூரு:
ரெயில் சேவை நீட்டிப்பு 
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு கன்டோன்மெண்ட்- அகர்தலா இடையே வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரெயில்(02515) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வருகிற 14-ந் தேதியுடன் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

 ஆனால் தற்போது இந்த ரெயில் சேவை அடுத்த மாதம்(ஜூன்) 18-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அகர்தலா- பெங்களூரு கன்டோன்மெண்ட் ரெயில்(02516) வருகிற 11-ந் தேதியுடன் நிறுத்தப்பட இருந்த நிலையில், அடுத்த மாதம்(ஜூன்) 15-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. 


பல்லாரி, ராஜமுந்திரி 
இதுபோல மைசூரு-தனபூர் இடையே வருகிற 11-ந் தேதி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(07312) இயங்க உள்ளது. மைசூருவில் இருந்து 11-ந் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் ரெயில் 13-ந் தேதி இரவு 8.45 மணிக்கு தனபூரை சென்றடைகிறது.  

இந்த ரெயில் கே.எஸ்.ஆர்.பெங்களூரு, யஷ்வந்தபுரம், துமகூரு, அரிசிகெரே, பீரூர், தாவணகெரே, கோட்டூர், ஒசப்பேட்டே, தோரணகல்லு, பல்லாரி, குண்டகல், துேராணசலம், நந்தயால், நரசரோபேட், குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், குர்தா ரோடு, பத்ராக், ஆத்ரா, அசன்சோல், மதுபூர், கியூல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story