பெங்களூருவில் தம்பதி கொலையில் 14 வயது மகன் கைது


பெங்களூருவில் தம்பதி கொலையில் 14 வயது மகன் கைது
x
தினத்தந்தி 8 May 2021 5:31 PM GMT (Updated: 8 May 2021 5:31 PM GMT)

பெங்களூருவில் தம்பதி கொலையில் 14 வயது மகன் கைது செய்யப்பட்டான். அறிவுரை கூறியதால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:

தம்பதி கொலை 

பெங்களூரு பீனியாவில் உள்ள அரசு அலுவலகத்தில் அனுமந்தராயா (வயது 42) என்பவர் காவலாளியாகவும், அவரது மனைவி ஹொன்னம்மா (34) துப்புரவு தொழிலாளியாகவும் வேலை செய்தார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அந்த அலுவலகத்திலேயே சிறிய ஷெட்டில் தம்பதி தங்களது மகன்களுடன் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி அனுமந்தராயாவும், ஹொன்னம்மாவும் தலை நசுங்கியபடி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தம்பதி கொலை வழக்கில், அவர்களது 14 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அறிவுரை கூறியதால்...

விசாரணையில், அந்த சிறுவன் அனுமந்தராயா சொல்வதை கேட்காமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மகனை திட்டி அனுமந்தராயா அறிவுரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தை மீது கல்லைப்போட்டும், இதனை தடுத்ததால் தாய் மீதும் கல்லைப்போட்டும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

தந்தையை மட்டுமே கொலை செய்ய சிறுவன் திட்டமிட்டதும், தாய் தடுத்ததால் அவரையும் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்பு சிறார் சிறையில் அந்த சிறுவன் அடைக்கப்பட்டான்.

Next Story