வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கல்: முன்னாள் அமைச்சரின் தம்பி கைது


வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கல்: முன்னாள் அமைச்சரின் தம்பி கைது
x
தினத்தந்தி 8 May 2021 7:45 PM GMT (Updated: 2021-05-09T01:15:25+05:30)

வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கியதாக முன்னாள் அமைச்சரின் தம்பி கைது செய்யப்பட்டார்.

திருச்சி, 
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 47). கார் டிரைவர். இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மனோகரன் வீட்டில் நேற்று திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் 480 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த தனிப்படைபோலீசார், மனோகரனை கைது செய்து, உறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மனோகரன் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story