2 வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு படையெடுத்த குடிமகன்கள்


2 வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு படையெடுத்த குடிமகன்கள்
x
தினத்தந்தி 9 May 2021 1:21 AM GMT (Updated: 9 May 2021 1:21 AM GMT)

தமிழக அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஒரு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது.

திருவள்ளூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஒரு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இருப்பினும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மே 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகத்தில் இரண்டு வாரம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் திருவள்ளூர், கடம்பத்தூர், சத்தரை, பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் திரண்டனர். அப்போது, தங்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

Next Story