மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபாட்டில்கள் பறிமுதல்; 13 பேர் கைது
பேரையூர், மே.10-
கொட்டாம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொட்டாம்பட்டி மற்றும் கருங்காலக்குடி பகுதியில் நடத்திய சோதனையில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்த வெள்ளமலைப்பட்டியை சேர்ந்த கருப்யையா(வயது 60) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர பள்ளபட்டியை சேர்ந்த கருப்பன்(72) என்பவரிடம் இருந்து 46 மதுபாட்டில்கள், உசிலம்பட்டியை சேர்ந்த மலைச்சாமி(37) என்பவரிடமிருந்து 56 மதுபாட்டில்கள், வலைவீரன்பட்டியை சேர்ந்த சசிக்குமார்(25) என்பவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
மேலும் பேரையூர் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, நாகையாபுரம், போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது டி.பாரைப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன்(45), இடையபட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி(26), கொல்லவீரம்பட்டியை சேர்ந்த யோகராஜா(21), வன்னிவேலம்பட்டியை சேர்ந்த சமையன்(50), குன்னத்தூரை சேர்ந்த ராமராஜ்(28), பொட்டிபுரத்தை சேர்ந்த சிவனேசன்(46) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 228 மதுபாட்டில்கள் வைத்திருந்தனர். ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
எழுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வந்த உத்தப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன்(25), பேரையம்பட்டியை சேர்ந்த ராமர் (35), தாடையம்பட்டியை சேர்ந்த பாண்டி(38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலீசார் அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story