மாவட்ட செய்திகள்

திருச்சியில் வக்கீல் கொலை + "||" + Lawyer murder

திருச்சியில் வக்கீல் கொலை

திருச்சியில் வக்கீல் கொலை
திருச்சியில் வக்கீல் கொலை செய்யப்பட்டார்
திருச்சி
திருச்சி பீமநகர் வடக்கு எடத்தெருவை சேர்ந்தவர் கோபிகண்ணன் (வயது 35). வக்கீலான இவருக்கு மனைவி கோதேஸ்வரி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். நேற்று தனது வீட்டின் அருகே மகளுக்கு கோபிக்கண்ணன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த 6-க்கும் மேற்பட்ட கும்பல் கோபிகண்ணனை மகள் கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.இதில் கோபிகண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் மற்றும் கண்டோன்மெண்ட் போலீசார் கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் வக்கீல் கோபிகண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.