மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு  கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 May 2021 10:38 PM IST (Updated: 10 May 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 483 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

கரூர், மே.11-
கரூர் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 483 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனா பரவல் குறையவில்லை. கரூர் மாவட்டத்தில் நோய் தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
483 பேர் குணம் அடைந்தனர்
இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 483 பேர் பூரண குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,541 ஆக உள்ளது.

Next Story