2-ம் நாள் ஊரடங்கு வெறிச்சோடிய 4 வழிச்சாலை


2-ம் நாள் ஊரடங்கு வெறிச்சோடிய 4 வழிச்சாலை
x
தினத்தந்தி 11 May 2021 9:21 PM GMT (Updated: 11 May 2021 9:21 PM GMT)

2-ம் நாள் ஊரடங்கையொட்டி 4 வழிச்சாலை வெறிச்சோடியது.

ஈரோடு
2-ம் நாள் ஊரடங்கையொட்டி 4 வழிச்சாலை வெறிச்சோடியது.
முழு ஊரடங்கு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாராக இருந்தாலும், ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை என்ற நிலை உள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த முடியாத ஒரு சூழலும் உள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசு வருகிற 24-ந் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து குறைந்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் ஊரடங்கை வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.
4 வழிச்சாலை வெறிச்சோடியது
ஈரோட்டில் காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டு இருந்தன. இந்த நேரத்தில் வாகன போக்குவரத்து இருந்தது. 12 மணிக்கு மேல் நகர் பகுதிக்குள் வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் அல்லது தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.  ஈரோடு மாநகரையொட்டி உள்ள சேலம்-கோவை 4 வழிச்சாலை நேற்று வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. அவ்வப்போது சரக்கு வாகனங்கள் மட்டும் சென்றன.

Next Story