சேரங்கோடு அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


சேரங்கோடு அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 12 May 2021 2:47 PM GMT (Updated: 12 May 2021 2:47 PM GMT)

ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 2, திருவள்ளுவர்நகர், சிங்கோனா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். 

இந்த நிலையில்  10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் திருவள்ளுவர் நகருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. 

விடிய விடிய அங்குள்ள குடியிருப்பை முற்றுகையிட்டபடி நின்றிருந்தன. இதனால் அந்தப்பகுதியை சே்ாந்தவர்கள் பீதியில் இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டினார்கள்.

ஆனால் அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகே சிங்கோனா தேயிலை தோட்டத்தை ஒட்டி உள்ள சோம்பு காட்டுக்குள் சென்றது. அந்த யானைகள் மீண்டும் குடியிருப்புக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால், வனத்துறையினர் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


Next Story