மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை + "||" + Unable to mourn the death of the father Marriage is engaged Younggirl suicide

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை
அரியாங்குப்பம், தந்தை இறந்த துக்கம் தாங்காமல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
அரியாங்குப்பம், 

அரியாங்குப்பம் மருதம் வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 62). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (வயது 29). இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8-ந்தேதி பன்னீர்செல்வம் திடீரென உயிரிழந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனது தந்தை இறந்ததால் கார்த்திகா மனமுடைந்து இருந்தார். இதனால் அவர் கழிப்பறைக்கு பயன்படுத்தும் திராவகத்தை (ஆசிட்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, மகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.