மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிய பொதுமக்கள் + "||" + At the ration shop The public who bought goods in keeping with the social gap

ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்

ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிய பொதுமக்கள்
ரேஷன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் உள்ள ரேஷன் கடையின் ஊழியா்கள், கடைக்கு வரும் பொதுமக்கள், வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வெள்ளை நிறத்தில் வட்டம் வரைந்து வைத்திருந்தனர். இதில் ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை என்று வட்டம் வரையப்பட்டிருந்தது. அதன்படி அந்த ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் அணிந்து, வட்டம் இடப்பட்ட இடத்தில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருந்து தங்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை
முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம்:மத்திய அரசு மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பிசா டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் போது ஏன் ரேஷன் பொருட்களை விநியோகிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.