பொன்னேரி ஏரியில் மணல் கடத்திய 2 பேர் கைது


பொன்னேரி ஏரியில் மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2021 5:19 PM IST (Updated: 14 May 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியை அடுத்த வெப்பத்துரில் உள்ள ஏரியில் மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

இதனையடுத்து பொன்னேரி வருவாய்த்துறையினர் மற்றும் திருப்பாலைவனம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர்கள் வெப்பத்துரை சேர்ந்த முரளி (வயது 30), அகரம் கிராமத்தை சார்ந்த மாசிலாமணி(45) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து திருப்பாலைவனம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story