மதுரை, கோவை மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் சென்றனர்
மதுரை, கோவை மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் சென்றனர்
அரக்கோணம்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அரசுகளின் வேண்டு கோளுக்கிணங்க புயல் எச்சரிக்கை மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரிகுப்பத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மதுரை, கோவை மற்றும் கேரள மாநிலத்துக்கும் சென்றனர்.
சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டத்திற்கு 2 குழுக்களும், கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம், இடுக்கி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு குழு வீதம் 9 குழுக்களை சேர்ந்த வீரர்கள் சென்றனர். ஒரு குழுவிற்கு 15 முதல் 20 வீரர்கள் உள்ளனர். அவர்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story