குரோம்பேட்டை தனியார் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு


குரோம்பேட்டை தனியார் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2021 3:32 AM IST (Updated: 17 May 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டை தனியார் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.

தாம்பரம், 

கொரோனா நோயாளிகளுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்‌, இந்த கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இந்த கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் வருகிற 19-ந்தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. அதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் இன்று தொடங்க உள்ளது” என்றார்.

அப்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story