கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி


கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 May 2021 7:28 PM GMT (Updated: 17 May 2021 7:28 PM GMT)

கொரோனாவுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பெரம்பலூர்:

135 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 76 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 28 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 13 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 18 பேரும் என மொத்தம் 135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,802 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 40 
இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.  மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 3,188 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,574 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 65 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்தப்பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,175 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
295 பேருக்கு தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 262 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 33 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரைக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி 36,951 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசி 2,148 பேருக்கும் என மொத்தம் 39,099 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 4,850-ம், கோவேக்சின் தடுப்பூசி 410-ம் கையிருப்பில் உள்ளது.

Next Story