ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 May 2021 7:28 PM GMT (Updated: 17 May 2021 7:28 PM GMT)

அணைக்குடம் ஊராட்சியில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தா.பழூர்:
கொரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் கிராமப்புறங்களில் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதையடுத்து, அணைக்குடம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா ஏற்பாட்டின்பேரில் அணைக்குடம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 100 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள், தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் தொற்றால் அதிக பாதிப்பு இல்லாத நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 நோயாளிகள் மட்டுமே தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 15 பேர் ஒரே நாளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 17 பேரில் ஒருவர் அரியலூர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் அணைக்குடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சிகள்) செந்தில், (கிராம ஊராட்சிகள்) அகிலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சகாதேவன் செய்திருந்தார்.

Next Story