திறந்த நிலையில் குடிநீர் தொட்டி


திறந்த நிலையில் குடிநீர் தொட்டி
x
தினத்தந்தி 17 May 2021 8:35 PM GMT (Updated: 17 May 2021 8:35 PM GMT)

திறந்த நிலையில் குடிநீர் தொட்டி

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்துக்கு தேவையான குடிநீருக்காக அதன் மாடி பகுதியில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு சமையல் மற்றும் பயனாளிகளுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவகத்தின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டி மூடாத நிலையில் திறந்து இருக்கிறது. அதனால் காற்று வீசும்போது தூசிகள் குடிநீர் தொட்டிக்குள் விழுந்து தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் குடிநீர் தொட்டியை சூழ்ந்து செடி, கொடிகள் முளைத்துள்ளது. 
மேலும் தொட்டியின் மேல்பகுதி மூடாத நிலையில் திறந்து இருப்பதால் குடிநீர் மாசுப்பட்டு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் அதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்து செடிகள் வளராதபடி நிரந்த தீர்வு காண வேண்டும். மேலும் மாற்று இடத்தில் புதிதாக ஒருகுடிநீர் தொட்டியை வைத்து சுத்தம் சுகாதாரம் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story