வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை


வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 18 May 2021 3:33 PM GMT (Updated: 18 May 2021 3:33 PM GMT)

நத்தம் அருகே வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி, பள்ளபட்டி, காசம்பட்டி, முளையூர் உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

 மேலும் அப்பகுதிகளை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக  சுகாதாரத்துறையினர் அறிவித்ததுடன், அந்த பகுதிகளை தகரத்தால் அடைத்து ‘சீல்’ வைத்தனர். 

மேலும் அந்த பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். 

இதில் நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த பணியில் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story