ஆலங்குளம் அருகே கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


ஆலங்குளம் அருகே கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2021 8:34 PM GMT (Updated: 18 May 2021 8:34 PM GMT)

ஆலங்குளம் அருகே கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஆலங்குளம், மே:
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். டாக்டர் சிவசந்திரனிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாலைவசதி, கூடுதல் கட்டிட வசதி, கழிவறை வசதி, மின்விளக்கு வசதி, கூடுதல் செவிலியர்கள், நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக சுகாதார துறை அமைச்சரிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டிடம், கழிவறை உள்ளிட்ட அவசர தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 
தொடர்ந்து உடையாம்புளி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். 
இதில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராதா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.கே.கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story