பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு


பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 20 May 2021 5:02 PM GMT (Updated: 2021-05-20T22:32:09+05:30)

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொேரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வரவேற்றார்.  கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- 

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதால் யாருக்கும் நிச்சயமாக பாதிப்பு இல்லை. அதனால் நமக்கு பாதுகாப்பு தான். முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் நமது மாவட்ட கலெக்டரும், அதிகாரிகளும் தீவிரம் காட்டுகின்றனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஊக்கப்பரிசும், கேடயமும் வழங்குவதாக  ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். எனவே கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்று கூடி தைரியமாக கிராம மக்களை தடுப்பூசி போட வைக்க வேண்டும். தடுப்பூசி போட்டால் நோயை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி போட நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். 
இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கிராம மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி தடுப்பூசி போட அழைத்து வர வேண்டும். நானும் தடுப்பூசி போட்டு உள்ளேன். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில், தூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சுகாதார துறை நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவர் சுமதி, சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன், சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் கோபால், தனி வட்டாட்சியர் செந்தூர் ராஜன், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெங்கடாசலம், வட்டார ஊராட்சி துணை அலுவலர்கள் ராஜேஷ்குமார், அமுதா லட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் டைட்லர், மாநில தி.மு.க. மாணவரணி துணை தலைவர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர் ஜெயா, பழங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்னடர். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சீனிவாசன் தொகுத்து வழங்கினார்.

Next Story