போலீசாரின் நடவடிக்கையால் நெரிசல் இல்லாமல் ஈரோடு வெறிச்சோடியது- காரணமின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்


போலீசாரின் நடவடிக்கையால் நெரிசல் இல்லாமல் ஈரோடு வெறிச்சோடியது- காரணமின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 May 2021 9:33 PM GMT (Updated: 25 May 2021 9:33 PM GMT)

ஈரோட்டில் காரணமின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் எடுத்த நடவடிக்கையால் ஈரோட்டில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின.

ஈரோடு
ஈரோட்டில் காரணமின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் எடுத்த நடவடிக்கையால் ஈரோட்டில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின.
ஊரடங்கு
ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு 2-வது நாளாக நேற்று அமல்படுத்தப்பட்டது. தளர்வுகள் இல்லை என்றாலும், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங் களை அனுமதித்து  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அரசு வழங்கிய சில தளர்வுகளையும் தங்களுக்கு சாதகமாக கொண்டு பலரும் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர்.
இந்த  நிலையில் ஈரோட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்கள். இதனால் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. நேற்று காளைமாடு சிலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரணமின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.
வெறிச்சோடியது
இதுபோல் வெண்டிபாளையம் கட்டளை கதவணை வழியாக நாமக்கல் மாவட்டத்தில்  இருந்து அவசியமின்றி பொதுமக்கள் வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டது.  இணையவழி இ-பதிவு அனுமதி இருந்தால் மட்டுமே அங்கு வாகனங்கள் வர அனுமதிக்கப்பட்டது. 
இதுபோல்  கருங்கல் பாளையம் சோதனைச்சாவடி, பன்னீர்செல்வம் பூங்கா, கலெக்டர் அலுவலகம், சுவஸ்திக் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனால் நேற்று ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story