ரெயிலில் கடத்த முயன்ற கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல்; 2 பேர் கைது


ரெயிலில் கடத்த முயன்ற கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2021 10:59 PM IST (Updated: 29 May 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் சென்னைக்கு கடத்த முயன்ற 484 கர்நாடக மாநில மது பானங்களை பறிமுதல் செய்து, 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் சென்னைக்கு கடத்த முயன்ற 484 கர்நாடக மாநில மது பானங்களை பறிமுதல் செய்து, 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர். 
ரெயில்களில் மதுபானங்கள் கடத்தல்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டது. இதனால் மது பிரியர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்ய கர்நாடக மாநிலத்தில் இருந்து ரெயில்களில் மது பாக்கெட்டுகள் கடத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் இணைந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்கும் ரெயில்களை சோதனை செய்தனர். 

அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சோதனை செய்யும் போது சீட்டு இருக்கையில் கர்நாடக மாநில மதுபானங்கள் இருந்தது. 

2 பேர் கைது

 இதையடுத்து கர்நாடக மாநில மதுபானங்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற திருவண்ணாமலை தேனிமலை கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 43) மற்றும் பெங்களூரு பில்லன்டன் கார்டன் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 484 மதுபானங்கள் மற்றும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து  திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story