செவிலியர்களுக்கு நிவாரண பொருட்கள்
செவிலியர்களுக்கு நிவாரண பொருட்கள்-தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்
மானாமதுரை
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இக்காலகட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, தாசில்தார் மாணிக்கவாசம் மற்றும் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் பாலகுருசாமி ஆகியோர் இணைந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி, பலசரக்கு பொருட்களை வழங்கினர். பின்னர் தமிழரசி எம்.எல்.ஏ. பேசும்போது, அடித்தட்டு மக்களுக்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றார், கொரோனா காலத்தில் மக்களை காக்க என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தி மக்கள் பணிக்காக உழைத்து வருகின்றார். அதனால் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story