மணல்மேடு பகுதியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
மணல்மேடு பகுதியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்..
மணல்மேடு,
மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கல்யாணசோழபுரம், கேசிகன், வக்காரமாரி, முடிகண்டநல்லூர், ராதாநல்லூர், பாக்கம், காவலைமேடு, தாழஞ்சேரி, வரகடை, தலைஞாயிறு, பட்டவர்த்தி, வில்லியநல்லூர், சித்தமல்லி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு இந்தபகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வப்போது பெய்துவரும் மழை மற்றும் மின் மோட்டாரை பயன்படுத்தி கடந்த மாதங்களில் நாற்றங்கால் தயார் செய்து விதை விதைத்தனர். பின்னர் நிலத்தை செப்பனிட்டு உழவு பணியை மேற்கொண்டனர். தற்போது விதைக்கப்பட்ட நாற்றுகளை பறித்து நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கடைமடை பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் மேட்டூர் அணை தண்ணீரை நம்பியே விவசாய பணிணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் மின் மோட்டார் வைத்துள்ள 60 சதவீதம் விவசாயிகள் மட்டுமே விவசாய பணியை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அறுவடை, உழவு, நடவு பணிகள் செய்ய எந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் விவசாய பணிகள் துரிதமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது.ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story