சீர்காழி பகுதியில் ரூ.65 லட்சத்தில் தூர்வாரும் பணி - பொதுப்பணித்துறை சார்பில் நடக்கிறது


சீர்காழி பகுதியில் ரூ.65 லட்சத்தில் தூர்வாரும் பணி - பொதுப்பணித்துறை சார்பில் நடக்கிறது
x
தினத்தந்தி 30 May 2021 12:33 PM GMT (Updated: 30 May 2021 12:33 PM GMT)

சீர்காழி பகுதியில் ரூ.65 லட்சத்தில் தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை சார்பில் நடக்கிறது.

சீர்காழி,

சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட மேலதேனூர் கிராமத்தில் உள்ள புதுமண்ணியாற்றில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெறுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உதவி பொறியாளர் சரவணன் தலைமை தாங்கினார். தூர்வாரும் பணியை சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பிரபாகரன் தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், சீர்காழி பகுதியில் புது மண்ணியாறு, பொறைவாய்க்கால், கழுமலையாறு, உப்பனாறு மற்றும் அதனை சார்ந்த கிளை வாய்க்கால்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள் நிறைவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

அப்போது சீர்காழி தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், முன்னோடி விவசாயிகள் அருள்குமார், சுப்பிரவேல், முத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story