மேலும் 597 பேருக்கு கொரோனா


மேலும் 597 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 May 2021 6:37 PM GMT (Updated: 30 May 2021 6:37 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
7 பேர் பலி 
மாவட்டத்தில் மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 37,004ஆக உயர்ந்துள்ளது. 28,374 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 8,235 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 396 உள்ளது. 
படுக்கைகள் 
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,078 படுக்கைகள் உள்ள நிலையில் 943 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 135 படுக்ைககள் காலியாக உள்ளன.
 சிகிச்சை மையங்களில் 1,558 படுக்கைகள் உள்ள நிலையில் 943 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 554 படுக்கைகள் காலியாக உள்ளன. 
பாதிப்பு 
விருதுநகர் சூலக்கரை, சங்கரன்கிணற்றுதெரு, மீசலூர், ஏ.ஏ.ரோடு, மதுரை ரோடு, அல்லம்பட்டி, மேற்கு போலீஸ் நிலையம், மீசலூர், ரோசல்பட்டி, பாலவனத்தம், பாண்டியன் நகர், லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் சுரைக்காய்பட்டி, சொக்கநாதன்புத்தூர், தேவதானம், சுந்தர நாச்சியார்புரம், முகவூர், சீலநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, கோபாலபுரம், கல்லமநாயக்கன்பட்டி, வ.புதுப்பட்டி, மேல கோடங்கிபட்டி, நாச்சியார்புரம், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, கல்லமநாயக்கன்பட்டி, கரிசல்குளம், ஆலங்குளம், கான்சாபுரம், ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி, பந்தல்குடி, மடத்துப்பட்டி, மகாராஜபுரம், நத்தத்துப்பட்டி, படந்தால், அப்பநாயக்கன்பட்டி, ஆனைக்குட்டம், அகதிகள் முகாமில் 21 பேர், சிவகாசி, சித்துராஜபுரம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாவட்ட பட்டியலில் 238 பேருக்கு பாதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 597 பேருக்கு பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story