பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் கிருமி நாசினி தெளிப்பு
பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று பரவாமல் இருக்க அங்கு தினமும் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில், திருமண மண்டபத்தை சுற்றி உள்ள பகுதியில், நவீன பெல் மிஸ்டர் கருவி மற்றும் நவீன டிராக்டர் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story