கருங்கல் ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது


கருங்கல் ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 31 May 2021 10:14 PM IST (Updated: 31 May 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே கருங்கல் ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே கருங்கல் ஏற்றி வந்த லாரி வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
4 பேர் காயம் 
பெரம்பலூரிலிருந்து கொரடாச்சேரி வழியாக நாகப்பட்டினத்திற்கு லாரி ஒன்று கருங்கல்லை ஏற்றி சென்றது. கொரடாச்சேரி வெள்ளைமதகு அருகே திருவாரூர் சாலையில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி லாரி சாலையோர பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த கருங்கல்கள் சிதறி வீட்டின் மேல் விழுந்ததில் சுவர் இடிந்தது. விபத்தின் போது வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 62), இவரது மனைவி ராணி (58), உறவினர்கள் ராமு (35), மீரா (12) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். 
டிரைவருக்கு வலைவீச்சு
இதனை பார்த்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அருகில்  இருந்தவர்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராமுவின் உறவினர் செந்தில் (40) என்பவர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய  லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story