‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் புதுப்பொலிவு பெற்ற எம்.எல்.ஏ. அலுவலகம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பொலிவு பெற்றது.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரத்தில் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த அலுவலகம் கட்டப்பட்டது. அப்போதைய சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. அந்த அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வந்தார். இதையடுத்து இந்த அலுவலகம் செயல்படாமல் இருந்தது.
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது வர்ணம் பூசப்பட்டு எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த அலுவலகத்தை விரைவில் திறந்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற ஏற்பாடுகள் நடந்து வருவதாக சேந்தமங்கலம் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story