மானாமதுரை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலா?-காய்ச்சல் முகாமில் கலெக்டர் நேரில் ஆய்வு

மானாமதுரை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலா?-காய்ச்சல் முகாமில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2021 6:17 PM GMT (Updated: 31 May 2021 6:17 PM GMT)

மானாமதுரை அருகே மானம்காத்தான் கிராமத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. அதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே மானம்காத்தான் கிராமத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. அதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கருப்பு பூஞ்சை அறிகுறி

மானாமதுரை அருகே சின்னகண்ணனூர் ஊராட்சி மானம்காத்தான் கிராமத்தை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

71 பேருக்கு பரிசோதனை

இதற்கிடையே அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் சுகாதாரத்துறையின் மூலம் அந்த கிராமத்தில் நேற்று காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று பொது சுகாதாரத்துறையின் மூலம் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த 71 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என சுகாதாரத்துறையினர் உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தினர். பரிசோதனையில் லேசாக காய்ச்சல் இருந்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Next Story