டி.ஏ.பி. உரம் பழைய விலைக்கே விற்பனை
மத்திய அரசின் கூடுதல் மானியத்தால் டி.ஏ.பி.உரம் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெற வேண்டும் என வேளாண் இயக்குனர் அறிவுரை வழங்கி உள்ளார்.
சிவகங்கை,
உரத்திற்கான மூலப்பொருட்களான பாஸ்பாரிக் அமிலம், அம்மோனியா விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. விலை உயர்வு அதிகமாக இருந்தாலும் விவசாயிகள் பாதிக்கக்கூடாது. அவர்களுக்கு பழைய விலையிலேயே உரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உர தயாரிப்பாளர்களுக்கு தரும் மானியத்தொகை 140 சதவீதம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி இதுவரை டி.ஏ.பி. உரத்திற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ500-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 140 சதவீத உயர்வாகும்.இதன் வாயிலாக விவசாயிகள் ஒரு மூடை பாஸ்பேட் உரத்தை பழைய விலைக்கே அதாவது ரூ.1200 ரூபாய்க்கு வாங்க முடியும். எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி. உரத்தினை பழைய விலைக்கே வாங்கிப் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story