கள் மது விற்ற 12 பேர் கைது


கள் மது விற்ற 12 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 6:47 PM GMT (Updated: 31 May 2021 6:47 PM GMT)

கள் மது விற்ற 12 பேர் கைது

கோவை

கொரோனா அச்சம் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 

இதனால் பலர் சட்ட விரோதமாக மது விற்று வருகிறார்கள். இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சூலூர், துடியலூர், பேரூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் ஒருசில தென்னந்தோப்புகளில் கள் விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து கள் விற்ற 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல் கோவை காட்டூர், ரேஸ்கோர்ஸ், பீளமேடு பகுதி போலீசார் சோதனை நடத்தினர். 

இதில் சட்ட விரோதமாக மது விற்ற கள்ளப்பன் லே-அவுட் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45), பாப்பநாயக்கன்பாளைத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (49), வீரியம்பாளையத்தை சேர்ந்த முத்து (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story