மாவட்ட செய்திகள்

வள்ளியூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது + "||" + Police arrested a person in possession of cannabis in Valliyoor.

வள்ளியூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

வள்ளியூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
வள்ளியூரில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் ஒருவர் பையுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் பார்த்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில், அவர் வள்ளியூர் ஊற்றடியை சேர்ந்த முருகன் (வயது 35) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.