திசையன்விளை அருகே மாணவி கடத்தல்; கொத்தனார் கைது


திசையன்விளை அருகே மாணவி கடத்தல்; கொத்தனார் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 1:16 AM IST (Updated: 1 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே மாணவியை கடத்திய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய தந்தை புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சவேரியார்புரத்தை சேர்ந்த ஞானராஜ் மகன் புஷ்பராஜ் (30) என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் அந்த மாணவியை காணவில்லை. இதுபற்றி அவரது தாய், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், புஷ்பராஜ் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு நாங்குநேரியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story