கிணற்றில் குதித்து நகராட்சி அதிகாரி தற்கொலை
பழனியில் ஓய்வு பெற்ற நகராட்சி அதிகாரி ஒருவர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பழனி:
பழனி ராமநாதன் நகர் அருகே உள்ள கிணற்றில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்து உடலை மீட்டனர்.
விசாரணையில் அவர், பழனி அடிவாரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 80) என்பதும், பழனி நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் அடிவார பகுதியில் தங்கி இருந்தார்.
சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story