மாவட்ட செய்திகள்

வள்ளியூர் அருகே பாலியல் தொல்லையால் விஷம் குடித்த 15 வயது சிறுமி + "||" + A 15 year old girl tried to commit suicide by drinking poison due to sexual harassment near Valliyoor.

வள்ளியூர் அருகே பாலியல் தொல்லையால் விஷம் குடித்த 15 வயது சிறுமி

வள்ளியூர் அருகே பாலியல் தொல்லையால் விஷம் குடித்த 15 வயது சிறுமி
வள்ளியூர் அருகே பாலியல் தொல்லை காரணமாக 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரைச் சேர்ந்தவர் செல்வன். இவருடைய மகன் மோசாக் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவளை உடனே உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி விசாரணை நடத்தி மோசாக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே, தலைமறைவான மோசாக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.