கோரதாண்டவமாடும் கொரோனாவை கட்டுப்படுத்த கிராமங்களில் வீடு வீடாக சளி, காய்ச்சல் பரிசோதனை; சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கோரதாண்டவமாடும் கொரோனாவை கட்டுப்படுத்த கிராமங்களில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
ஈரோடு
கோரதாண்டவமாடும் கொரோனாவை கட்டுப்படுத்த கிராமங்களில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஈரோட்டில் தொற்று பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும் கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கிராமங்களில் கோரதாண்டவமாடும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கிராம செயலாளர்கள், சுகாதார துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வீடு வீடாக பரிசோதனை
கிராமங்களில் 100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று கணக்கெடுத்து வருகிறார்கள்.
கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களது விவரங்களை குறிப்பெடுத்து கொள்ளும் அவர்கள், உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story