மாவட்ட செய்திகள்

தென்காசியில் கொரோனாவுக்கு 6 பேர் பலி + "||" + Six people were killed for corona in a single day in Tenkasi yesterday.

தென்காசியில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
தென்காசியில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயது, 40 வயது, 70 வயது பெண்கள், 62 வயது 73 வயது முதியவர்கள் மற்றும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 38 வயது ஆண் என மொத்தம் 6 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் நேற்று 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 18 ஆயிரத்து 323 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.