மாவட்ட செய்திகள்

சேலம் மத்திய சிறையில் மேலும் 3 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு + "||" + Salem Central Jail Corona exposure for 3 more prisoners

சேலம் மத்திய சிறையில் மேலும் 3 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மத்திய சிறையில் மேலும் 3 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மத்திய சிறையில் மேலும் 3 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் உள்ள பல கைதிகளுக்கும், போலீசாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைத்தொடர்ந்து சக கைதிகள் மற்றும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேலும் 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நேற்று மாலை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 14 கைதிகள் மற்றும் 9 போலீசாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.