மாவட்ட செய்திகள்

ஓமலூர் அருகே15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது + "||" + Near Omalur Youth arrested for kidnapping 15-year-old girl

ஓமலூர் அருகே15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது

ஓமலூர் அருகே15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது
ஓமலூர் அருகே 15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவருடைய மகன் தமிழரசு (20). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தீவட்டிப்பட்டி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சிறுமியை கடத்தி சென்ற தமிழரசுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.