மாவட்ட செய்திகள்

டி.வி. நடிகர் வீட்டில் 27 பவுன் தங்க நகைகள் திருட்டு + "||" + TV Theft of 27 pound gold jewelery at the actor's home

டி.வி. நடிகர் வீட்டில் 27 பவுன் தங்க நகைகள் திருட்டு

டி.வி. நடிகர் வீட்டில் 27 பவுன் தங்க நகைகள் திருட்டு
டி.வி. நடிகர் வீட்டில் 27 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் ஜெயபாரதி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30). டெலிவிஷன் நடிகரான இவர், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று காலை மதன்குமார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகளையும், ரூ.20 ஆயிரத்தையும் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.