மராட்டியத்தில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை சென்னை துறைமுகத்திலிருந்து ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பும் பணி


மராட்டியத்தில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள்  வருகை சென்னை துறைமுகத்திலிருந்து ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பும் பணி
x
தினத்தந்தி 1 Jun 2021 4:04 AM GMT (Updated: 3 Jun 2021 7:49 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் இருந்து ரெயிலில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை துறைமுகத் தலைவர் சுனில்பாலீவால் ஆய்வு செய்தார்.

சென்னை,

தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு ரெயிலில் கொண்டுவரப்படும் உயிர்காக்கும் ராட்சத அளவிலான ஆக்சிஜன் சிலிண்டர்களை சென்னை துறைமுக ரெயில்வே பகுதியில் முறையாகவும், துரிதமாகவும் கையாண்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி துறைமுகத்தில் கையாளப்படும் இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. அனைத்து கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மராட்டிய மாநிலம் டால்வி நகரில் உள்ள ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் நிறுவனத்திலிருந்து சரக்கு பெட்டக ரெயில்கள் மூலமாக சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்ட இப்பணியினை சென்னை துறைமுகத் தலைவர் சுனில்பாலீவால் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சென்னை துறைமுக துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், டிட்கோ நிறுவன பொதுமேலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story