மீஞ்சூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மீஞ்சூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2021 11:16 AM IST (Updated: 2 Jun 2021 11:16 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீஞ்சூர், 

மீஞ்சூர் வரதராஜ புரத்தை சேர்ந்தவர் வேதிஷா (வயது 21). இவர் சரத்குமார் (25) என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வேதிஷாவிடம் வரதட்சணையாக நகை, பணம் வாங்கி வரக்கூறி கணவர் சரத்குமார், மாமனார், மாமியார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேதிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story