ெரயில் பெட்டியில் 47 மதுபாட்டில்கள்


ெரயில் பெட்டியில் 47 மதுபாட்டில்கள்
x
தினத்தந்தி 3 Jun 2021 12:45 AM IST (Updated: 3 Jun 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ெரயில் பெட்டியில் இருந்து 47 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்,
விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு நேற்று காலை மைசூர் -தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ெரயில் வந்தபோது ெரயில்வே போலீசார் ெரயில் பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2-ம் வகுப்பு பெட்டியில்  47 மதுபாட்டில்கள் ஒரு பெட்டியில் இருந்தது.  அதனை கொண்டுவந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. ெரயில்வே போலீசார் மதுபாட்டில்களை கைப்பற்றி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுபற்றி ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story